கதைகள் அறிவோம்
குழந்தைகளுக்காக நான் எழுதியுள்ள ஏழு புத்தகங்களை கடந்த இரண்டு மாதங்களில் மதுரை, திருச்சி, ராஜபாளையம். சென்னை, ஆத்தூர் என்று பல்வேறு நகரங்களில் உள்ள பள்ளிகளில் அறிமுகப்படுத்தியும் கதைசொல்லியும் வருகிறேன்.ராஜபாளையத்தில் உள்ள ஆனந்தா பள்ளியில் நடைபெற்ற புத்தக அறிமுக நிகழ்வில் ஏழு பள்ளிமாணவர்கள் இந்தப் புத்தகங்களை வாசித்து தங்களின் கருத்துரைகளை வழங்கியது சிறப்பாக இருந்தது
திருச்சி எஸ்ஆர்வி பள்ளியில் ஆசிரியர்களுக்குக் கதை சொல்வதற்கான ஒரு நாள் பயிலரங்கினை நடத்தினேன், கதை சொல்வதை கல்வியோடு இணைந்த ஒரு பாடமாகவே அறிமுகப்படுத்தி மாணவர்களை ஊக்கப்படுத்துகிறது இப்பள்ளி, நூற்றுக்கும் மேற்பட்ட ஆசிரியர்களுடன் நடந்த கலந்துரையாடல் புதிய அனுபவமாக இருந்தது.
சென்னையில் நடைபெற்ற பள்ளிநிகழ்வில் இந்தக் கதைகளை வாசிக்க நிறைய சிறுவர்கள் தடுமாறுவதை உணர முடிந்த்து, அவர்கள் கேட்பது ஆங்கிலத்தில் எழுதப்பட்ட எளிமையான கதைகளை, அதிலும் ஹாரிபோட்டர் போன்ற சாகசக்கதைகளையே வாசிக்க விரும்புகிறார்கள்,
தமிழில் கதைப்புத்தகத்தை வாசிக்கச் சொன்னால் பெரும்பான்மை மாணவர்கள் தடுமாறுகிறார்கள், உச்சரிப்புத் தவறுகள் ஏராளம், நீங்களாக ஏதாவது ஒரு கதை சொல்லுங்கள் என்று சொன்னால் பலரும் கதை சொல்லத்தெரியவேயில்லை என்று மௌனமாகிவிடுகிறார்கள், சிறுநகரங்களில் படிக்கும் சிறுவர்கள் கதை சொல்வதில் காட்டும் ஆர்வம் இவர்களிடமில்லை.
இந்தப் புத்தகங்களை பாரதி புத்தகாலயத்தின் குழந்தைகளுக்கான பிரிவு புக் ஃபார் சில்ரன் வெளியிட்டுள்ளது.
ஏழு புத்தகங்களும் ஒன்றாக வாங்க விரும்புகின்றவர்களுக்கு சலுகை விலையில் புத்தகம் கிடைக்கும் என்று பாரதி புத்தகாலயம் அறிவித்திருக்கிறார்கள்
ஒவ்வொன்றும் ரூ.25 மொத்தமாக வாங்கினால் ரூ.150 மட்டுமே.
தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி
பாரதி புத்தகாலயம்
421, அண்ணாசாலை, சென்னை-600018
91-44-24332424
http://www.thamizhbooks.com/
well said....bulls eye...
ReplyDelete