தமிழ் நவீன இலக்கிய எழுத்தாளாரான எஸ்.ராமகிருஷ்ணன் அவர்கள் எழுதிய "கதாவிலாசம்" புத்தகம் படித்தேன்...சற்றே வித்தியாசமானது ....தன்னை பாதித்த தமிழ் எழுத்தாளர்களின் கதைகளை, தன சொந்த அனுபவங்களையும் சேர்த்து எழுதிஇருக்கிறார்..ஐம்பது எழுத்தளர்களின் வெவ்வேறு விதமான சிறுகதைகள் மற்றும் அந்த எழுத்தளர்களின் சிறு குறிப்பு மற்றும் புகைப்படங்களுடன் தந்து இருப்பது இந்த நூலுக்கு மேலும் ஒரு சிறப்பு...நம் தமிழ் மரபே கதை மரபுதான்...ஆனால் இந்த அவசர உலகில் நமக்கு கதை சொல்லவோ , கதை படிக்கவோ நேரம் இல்லை ! ...இங்கே கொடுக்கப்பட்டுள்ள ஐம்பது கதைகளும் மிக சிறியவை தான்... ஒன்று அல்லது இரண்டு பக்கங்கள் தான் இருக்கும் ...பாரதி முதல் தற்கால எழுத்தாளர்களான ஜெயமோகன் வரை இதில் அடங்கும்...ராமகிருஷ்ணன் அவர்கள் தன சந்தித்த சாதாரண மக்கள் முதல் எழுத்தாளர்கள் வரை இதிலே பதிவு செய்துருகிறார்..ஒரு பக்க அளவு சிறுகதை என்றாலும் அதன் சுவை , அவை ஏற்படுத்திய தாக்கம் நீங்கள் படித்தால் மட்டுமே உணர முடியும் ...
மேலும் விவரங்களுக்கு :
"கதாவிலாசம்" - எஸ்.ராமகிருஷ்ணன்
விகடன் பிரசுரம்
விலை : ரூ .175
No comments:
Post a Comment